ETV Bharat / state

குல்லா அணிந்து இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த செங்கோட்டையன்! - பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்து வெளியேறிய இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகிய பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்து வெளியேறிய இஸ்லாமிய பெருமக்களிடம் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

AIADMK candidate
பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்து வெளியேறிய இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
author img

By

Published : Apr 2, 2021, 6:12 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில், 9ஆவது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், டி.என்.பாளையம், நம்பியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஒன்றியங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒன்றியங்கள் எனக் கணக்கிட்டு, ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, வீடு வீடாகவும், திறந்த வாகனத்தில் நின்றும் வாக்கு சேகப்பில் ஈடுபட்டு வந்த அமைச்சர் செங்கோட்டையன், இன்று (ஏப்.2) வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமியர்கள் வழிபாட்டுக்குக் கூடும் இடமான பள்ளி வாசல்களின் முன் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் முன்பு நின்ற வேட்பாளர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு கேட்டார். மேலும் இஸ்லாமியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் வாக்குறுதி நல்கினார்.

பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்து வெளியேறிய இஸ்லாமியர்களிடம் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு

நல்லகவுண்டம்பாளைத்தில் உள்ள பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த அமைச்சர் செங்கோட்டைனிடம் இஸ்லாமியர்கள் வாக்கு அளிப்பதாக உறுதி அளித்தனர். மேலும் அமைச்சர் வெற்றி பெற வேண்டி தொழுகை நடத்தி ஓதினர். அதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் மிகவும் மகிழ்சியடைந்தார்.

இதையும் படிங்க: குறுக்கு வழியில் பிரதமரான மோடி என்னை குறை கூறுவதா? - உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.