ETV Bharat / state

குடிபெயர்ந்தோர் சொந்த ஊர் செல்வதைத் தடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லவிடாமல் தடுக்கும் நிறுவனங்கள்

ஈரோடு: குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்குச் செல்லவிடாமல் தடுக்கும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார்.

வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்
வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்
author img

By

Published : May 29, 2020, 2:30 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் தங்களது வெளிமாநிலப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பவிடாமல் தடுத்தும், அடைத்தும் வைத்துள்ளதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதேபோல், தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஒருசில நிறுவனங்கள் தங்களது வெளிமாநிலத் தொழிலாளர்களை அனுப்பாமல் தடுத்துவைத்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்தப் புகார் உண்மையா என்பது குறித்து ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “எனது தலைமையில் அரசு உயர் அலுவலர்கள், காவல் துறை அடங்கிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்கு பணிபுரிந்துவந்த வெளிமாநிலத் தொழிலாளர்களை மாநிலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டது.

அவர்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பப்படுவோர் எத்தனை பேர் என்றும் இங்கேயே இருக்க விரும்புவோர் எத்தனை பேர் என்றும் பதிவுசெய்யப்பட்டது. அதேபோல், நிறுவனம் அல்லாத பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்தும் பட்டியல் எடுக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் அனைவரும் சிறப்பு ரயில்கள் மூலம் கடந்த ஒரு வாரமாக பிகார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு-வருகிறது. ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் கடந்த 22ஆம் தேதி ஆயிரத்து 400 பேர் சிறப்பு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போதுவரை வெளிமாநிலத் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பாமல் தடுப்பதாக எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி புகார் வரும்பட்சத்தில் அந்த நிறுவனம் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ஏற்கனவே அனைத்து தொழிற்சாலை நிறுவனங்களை அழைத்து யாரையும் தடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தொடர்ந்து சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு-வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் எந்த நிறுவனமும் குடிபெயர்ந்த தொழிலாளர்களைப் பிடித்துவைக்கவில்லை, அதுபோல் எந்த ஒரு பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூடானில் சிக்கித் தவிக்கும் 400 தமிழர்கள்: காணொலியில் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.