ஈரோடு: கடந்த 2020ஆம் ஆண்டில், அப்போதைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் கார் ஓட்டுநராக இருப்பதாகவும், தனக்கு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை வாங்கித் தருவதாகவும் சுதாகர் எனும் ஒருவர் மாணிக்கம்பாளையத்தைச்சேர்ந்த தவமணி என்பவரிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய தவமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் 20 பேர் சுமார் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளனர். இதற்காக போலியாக பணி நியமன உத்தரவைக் கொடுத்த சுதாகர், கரோனா முடிந்தபின் பணியில் சேரலாம் எனக்கூறி அதனைத் திரும்பப் பெற்றுள்ளார்.
பணம் பெற்று 2 ஆண்டுகளாகியும் வேலையும் தராமல், பணத்தையும் திரும்ப தராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 வழக்குகளில் ஜாமீன்.. சவுக்கு சங்கருக்கு ஹேப்பி நியூஸ்!