ETV Bharat / state

பழனி அருகே சாலை விபத்தில் பெண் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் - Woman killed in road accident near Palani

பழனி அருகே நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுசம்பந்தமான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
author img

By

Published : Mar 11, 2022, 4:55 PM IST

Updated : Mar 11, 2022, 5:07 PM IST

திண்டுக்கல்: பழனி மருத்துவ நகரைச் சேர்ந்தவர், பாண்டி (65). இவரது மனைவி பாப்பாத்தி என்ற பழனியம்மாள். அடிவாரம் பகுதியில் வியாபாரம் செய்துவரும் பாண்டி, தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 10) மாலை தனது வீட்டில் இருந்து அடிவாரம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.

சாலை விபத்தில் பெண் பலி

அப்போது பழனி புறவழிச்சாலையில் உள்ள பழனி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று பாண்டியின் இருசக்கர வாகனத்தின்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டி, அவரது மனைவி பாப்பாத்தி ஆகிய இருவரையும் பொதுமக்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

தலையில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனி அடிவாரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தம்பதி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: எரியும் பனிக்காடு - வெயிலால் தீப்பற்றி எரிந்து சேதமாகும் காடுகள்

Last Updated : Mar 11, 2022, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.