திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் மாதம்முதல் பிப்ரவரி மாதம்வரை கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததின் காரணமாக குளிர் சீசன் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளது.
டிசம்பர் மாதம் குளிர் குறைந்திருந்த நிலையில் தற்போது குளிரின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது.
குறிப்பாக மூஞ்சிக்கல் பகுதியில் ஏழு டிகிரி ஆகவும், ஏரிச்சாலையில் ஆறு டிகிரி ஆகவும் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறன.
மேலும், குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் கடுங்குளிர் !