ETV Bharat / state

பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு - பாலாறு பொருந்தலாறு அணை

பழனி பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து விவசாயத் தேவைக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பு
author img

By

Published : Nov 3, 2022, 5:18 PM IST

திண்டுக்கல்: பழனி பாலாறு - பொருந்தலாறு அணையில் தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 65 அடி உயரம் கொண்ட பாலாறு - பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து விவசாயத் தேவைக்காக தண்ணீர் திறந்து விடக்கோரி முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து பழைய அணைக்கட்டு கால்வாய் மூலம் புன்செய் பாசனத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 1,220 கன அடி தண்ணீர் பழைய அணைக்கட்டு கால்வாய் வழியாக செல்கிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி பழனியில் உள்ள பெரியஅம்மாபட்டி, தாமரைகுளம், நெய்க்காரப்பட்டி, மானூர், கோரிகடவு உள்ளிட்ட 16 கிராமங்களிலுள்ள 6,168 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வணிகர்கள் கருத்தாய்வு கூட்டம்: தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வழிவகை கிடைக்கும் - விக்கிரமராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.