ETV Bharat / state

வைரல் வீடியோ...வடமாநில இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் சைக்கோ மனிதன்... - வடமாநில இளைஞர்

வடமாநில இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் சைக்கோ மனிதனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ
author img

By

Published : Sep 10, 2022, 8:14 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா பழனி ரோட்டில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் வடமாநில இளைஞர் ஒருவரை கரண்டியை எடுத்து கடுமையாக தாக்கியும், கால்களால் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து விசாரிக்கையில் கரோனா காலகட்டத்தில் குடிபோதையில் வீட்டிற்குள் வந்த ஆனந்த் தன்னுடைய இரண்டு வயது மகளை தூக்கி துணி துவைப்பது போல் கடுமையாக தாக்கியுள்ளார். அதனை அவரது மனைவி தடுத்தும், அவரையும் கடுமையாக தாக்கியதாக மனைவி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்தின் மனைவி, அவருடைய தந்தையிடம் தகவல் கொடுத்ததின் பேரில், திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன் மனைவியை மிரட்டுவதற்காக வடமாநில இளைஞரை கடுமையாக தாக்கி, அதனை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி ”உன்னையும் இது போன்று தாக்கி கொலை செய்து விடுவேன்” என்றும் வழக்கை வாபஸ் வாங்குமாறும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

வடமாநில இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் சைக்கோ மனிதன்

இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய வட மாநில இளைஞர் இரயிலில் ஏறி தப்பிக்க சென்ற போது, கரூர் ரயில்வே காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு விடுதியில் பத்திரமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தன் மகளை தாக்கியதற்காக வழக்கு நடைபெற்று வாரண்ட் பிறபிக்கப்பட்டும் ஆனந்தகுமாரை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இவ்வாறு மது போதையில் சைக்கோ போல் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: போதையில் இருவர் மோதல் - கத்தியால் ஒருவரைஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.