திண்டுக்கல்: வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்த இரண்டு நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக அவசர ஊர்தியில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தது. சத்திரப்பட்டி என்ற இடத்தில் தனியார் பேருந்து ஒன்று சாலை ஓரத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது.
அப்போது வேகமாக வந்த அவசர ஊர்தி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாகப் பயங்கரமாக மோதியது. இதில் அவசர ஊர்தியில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வாகன ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவ உதவியாளர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
காவல் துறை விசாரணை
இதனையறிந்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வாகன போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்தவர்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: எலக்ட்ரீசியன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு