கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் பலரும் பணி முடிந்து வீடு திரும்புகையில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி பணி நேரங்களுக்குத் தகுந்தவாறு மாவட்ட நிர்வாகம் சிறப்பு பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி - தனிமைப்படுத்தப்பட்ட 1,800 வீடுகள்!