ETV Bharat / state

வேடசந்தூரில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்- போலீசார் விசாரணை - சடலம் மீட்பு

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே காணாமல் போன 65 வயதுடைய முதியவர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இறந்து கிடந்த முதியவர்
author img

By

Published : May 17, 2019, 7:31 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கொங்கு நகரைச் சேர்ந்த பழனிசாமி தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். இவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரது சகோதரர் ராஜ்குமார் வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ராஜ்குமாரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் பழனிசாமியை தீவிரமாக தேடி வந்தனர்.

சடலமாக இறந்து கிடந்த முதியர்

இந்நிலையில், நேற்று வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் அருகே நான்கு கிலோமீட்டர் தொலைவில் செங்குளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஏதோ துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின்னர் வேடசந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி சோதனை செய்து பார்த்ததில், அவர் கொங்குநகரை சேர்ந்த பழனிசாமி என தெரியவந்தது.

பின்பு, இது கொலையா? தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திண்டுக்கல். 
ஒட்டன்சத்திரம் &பழனி
ம.பூபதி      மே:16

வேடசந்தூர் அருகே காணாமல் போன 65.வயது மிக்க முதியவர் உடல் அழுகிய நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கண்டெடுப்பு.

 வேடசந்தூர் நகர் பகுதியில் உள்ளது கொங்கு நகர் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார் பழனிச்சாமி என்பவர் இவர் கடந்த 09.05.19 அன்று வீட்டை விட்டு சென்றவர் சுமார் மூன்று தினங்களாக வீடு திரும்பாததால் பழனிச்சாமி என்பவரின் சகோதரன் ராஜ்குமார் என்பவர் வேடசந்தூர் காவல்நிலையத்தில் தனது சகோதரன் காணவில்லை என புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் வேடசந்தூர் போலீசார் தேடி வந்த நிலையில் இன்று வேடசந்தூர் -ஒட்டன்சத்திரம் சாலையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில்  செங்குளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஏதோ துர்நாற்றம் வீசுவதை கண்டு நேரில் சென்று பார்த்த போது அப்போது 65.வயது மதிக்கதக்க ஆண் சடலம் என தெரிந்தது பின்பு வேடசந்தூர் காவல்நிலையத்திற்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் அழுகிய நிலையில் இருந்த உடலை சோதனை செய்ததில் அவர் வேடசந்தூர் கொங்குநகரை சேர்ந்த பழனிச்சமி என தெரியவந்தது பின்பு உடலை கைப்பற்றி இது கொலையா  தற்கொலையா அல்லது வேற ஏதும் காரணமா என போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.