ETV Bharat / state

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கிய யாசகர் - Thoothukudi begger

தூத்துக்குடி அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திவரும் முதியவர், இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாயை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கிய யாசகர்

author img

By

Published : May 16, 2022, 6:17 PM IST

தூத்துக்குடி: ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் ஊர் ஊராக சென்று கோயில்களில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் திண்டுக்கல் வந்த பூல் பாண்டியன் திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களில் யாசகம் எடுத்ததில் ரூ.10,000 கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாண்டியன், தான் யாசகம் எடுத்து சேர்த்து வைத்திருந்த ரூ.10,000 ஆயிரத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகனிடம் வழங்கினார்.

இவர் ஏற்கெனவே கரோனா நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூ.7 லட்சம் இதுவரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது கடினம் - அமைச்சர் சேகர்பாபு'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.