திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான புலியூர், கேசி.பட்டி, பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமப் பகுதிகளில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.
இங்கு பீன்ஸ், கேரட், அவரை, முட்டைகோஸ் ஆகியவை அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது கரோனா இரண்டாம் அலையின் காரணமாக காய்கறிகள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே ஒற்றைக் காட்டு யானை விளைநிலங்களைச் சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தி வருவதாகவும், இதுகுறித்து பல முறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகளும் பொதுமக்களும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆவின் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!