ETV Bharat / state

பழனியில் மீண்டும் கைவரிசைக் காட்டிய கொள்ளையர்கள்! - கைரேகை நிபுணர்கள்

திண்டுக்கல்: வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 20 சவரன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking the lock of the house
Breaking the lock of the house
author img

By

Published : Jan 14, 2020, 9:50 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரில் வசித்துவருபவர் மருதுசாமி (65). இவர் புஸ்பகைங்கர்ய சபா நிர்வாகியாக இருந்துவருகிறார். மருதுசாமி தனது மனைவியுடன் மருத்துவச் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தபோது கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து, உடனடியாக பழனி நகர காவல் துறையினருக்கும் மருதுசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்திராநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இரண்டு தினங்களுக்கு முன்பு பழனியில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்த வழக்கில், காவல் துறையினர் கொள்ளையர்களைத் தேடிவரும் நிலையில் மீண்டும் பழனி நகரில் அதேபோன்ற மற்றொரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது மேலும் பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.

பழனியில் மீண்டும் கைவரிசைக் காட்டிய கொள்ளையர்கள்

பொதுமக்கள் நீண்டநாள்கள் வெளியூரில் சென்று தங்க வேண்டிய சூழல் ஏற்படும்போது வீட்டில் விலையுயர்ந்த பொருள்களை வைத்துவிட்டுச் செல்ல வேண்டாம் எனவும், அடிக்கடி வெளியூர் செல்லும் நபர்கள் வீட்டின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் பழனி நகர காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Intro:திண்டுக்கல் 13.01.2020

பழனி இந்திராநகரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் திருட்டு . வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை . சம்பவ இடத்தில் போலீசார் விசாரணைBody:திண்டுக்கல் 13.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

பழனி இந்திராநகரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் திருட்டு . வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை . சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரில் வசித்து வருபவர் மருதுசாமி (65) புஸ்பகைங்கர்ய சபா நிர்வாகியாக இருந்துவருகிறார். மருதுசாமி தனது மனைவி வள்ளியம்மாளை அழைத்துக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக கோவையில் தனது மகள் வீட்டிற்க்கு சென்றுள்ளார். மருதுசாமி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில் இரண்டு நாட்களாக வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் காலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தபோது வீட்டில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது உடனடியாக பழனி நகர காவல் துறையினருக்கும் மருதுசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர் வீட்டில் திருட்டு நடந்தது குறித்து தகவல் அறிந்த மருதுசாமி வீட்டில் பீரோவில் 20 சவரன் அழகிற்கான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்திராநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளது பொதுமக்கள் அச்சம் அடைய செய்துள்ளது . இரண்டு தினங்களுக்கு முன்பு பழனியில் வழக்கறிஞர் அருளாணந்தம்முத்துக்குமாரசாமி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து பூட்டை உடைத்து 50 சவரன் பழங்கால நகைகளை திருடிச் சென்றனர். போலீஸர் இந்த வழக்கில் கொள்ளையர்களை தேடிவரும் நிலையில் மீண்டும் பழனி நகரில் அதேபோன்ற மற்றொரு திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது மேலும் பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது. பொதுமக்கள் நீண்ட நாட்கள் வெளியூரில் சென்று தங்க வேண்டிய சூழல் ஏற்படும்போது வீட்டில் விலை உயர்ந்த பொருட்களை வைத்துவிட்டு செல்ல வேண்டாம் எனவும், அடிக்கடி வெளியூர் செல்லும் நபர்கள் வீட்டின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் பழனி நகர காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.Conclusion:திண்டுக்கல் 13.01.2020
பழனி இந்திராநகரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் திருட்டு . வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை . சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.