திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள வி.குரும்பப்பட்டி அருகில் செல்வம், ஜெயக்கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் பரப்புள்ள கரும்புத் தோட்டம் உள்ளது.
இந்தத் தோட்டத்தில் திடீரென தீ பற்றி மளமளவென எறியத் தொடங்கியது. இதனையடுத்து வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால், 180 டன் கரும்புகள் தீயில் எறிந்ததால் தற்போது 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயி ஒருவர், “தற்போது ஒரு டன் கரும்பு 2700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழலில் 180 டன் கரும்பு தீக்கிரையாக்கியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கரும்பு விவசாயத்தை பொறுத்தவரை ஒரு டன் கரும்பிற்கு 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் இம்முறை கரும்பு தீக்கிரையானதால் ஒரு வருட உழைப்பு வீணாகியுள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் எரிக்கப்படும் குப்பைக் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு