திண்டுக்கல் மாவட்டத்தல் மே 5ஆம் தேதி முதல் கட்டுமானப் பணிகளுக்கான பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், விவசாயத்திற்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து வியாபாரம் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இன்று ஏராளமான கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. மக்களும் பொருள்கள் வாங்க அலை அலையாக வந்த வண்ணமே இருந்தனர். தகுந்த இடைவெளியைப் பின்பற்ற கடைகளுக்கு வெளியே கட்டடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அதனை மக்கள் யாரும் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொருள்களை வாங்கிச் சென்றனர். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்தியவர் ஆலைக்கு சீல்!