ETV Bharat / state

குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி - சின்னாளபட்டி பேரூராட்சியில் குடிநீரில் கழிவுநீர்

திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி!

author img

By

Published : Dec 18, 2022, 10:27 PM IST

குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி!

திண்டுக்கல்: சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பொதுமக்களுக்கு 3 மேல்நிலை; குடிதண்ணீர் தொட்டிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வி.எம்.எஸ். காலனி 2ஆவது தெரு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யும்போது குடிதண்ணீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சுகாதார ஆய்வாளருக்கு புகார் செய்து இது மாதிரி கழிவுநீர் கலந்து வருவதால் வி.எம்.எஸ். காலனி பொதுமக்களுக்கு நோய்கள் வரும் என தெரிவித்த பின்பு சம்மந்தப்பட்ட மதகு திறப்பாளர் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வி.எம்.எஸ். காலனியைச் சேர்ந்த ராஜா கூறுகையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக எங்கள் பகுதிக்கு இம்மாதிரி குடிதண்ணீர் வந்துள்ளது. பொதுமக்களோ, குழந்தைகளோ குடிதண்ணீரை காய்ச்சாமல் குடித்தால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் ஒவ்வொரு முறையும் பேரூராட்சி சார்பாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் போது தண்ணீர் திறந்து விடுபவர்கள் சம்மந்தப்பட்ட பகுதிக்குச் சென்று தண்ணீர் முறையாக வருகிறதா? அல்லது அசுத்தம் கலந்து வருகிறதா? என பார்வையிடவேண்டும்.

ஆனால் தண்ணீர் திறப்பாளர்கள் தண்ணீரை திறந்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் மீண்டும் அப்பகுதிக்கே வருகிறார்கள். தண்ணீர் உடைந்து வீணாகி சாக்கடையில் கலந்தாலோ அல்லது கழிவுநீர் கலந்து வந்தாலோ கவனிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் ஒவ்வொரு முறையும் விநியோகம் செய்யும்போது தண்ணீர் திறந்து விடுபவர் அனைத்து பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர் - சென்னையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.