திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பன் என்ற அருண். இவர் திண்டுக்கல் மாவட்ட திமுக நகர் வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
பைனான்ஸ் தொழில் செய்து வந்த அருணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இவரை அக்டோபர் 22ஆம் தேதி இரவு மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே அருண் வந்த பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் அருணை வெட்டி படுகொலை செய்தனர்.
இது குறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜார்ஜ்(32) என்பவருக்கு அருணுக்கும் இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக ஜார்ஜ் அவரது அண்ணன் பிரான்சிஸ்(36), சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சபரிகாந்தன்(29), அதே பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன்(22).
திருச்சி இடமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார்(23), அந்தோணி்(24), சாணார்பட்டி அடுத்துள்ள ஏரமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி(24), சின்னாளப்பட்டியைச் கார்த்திக்(27), மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜோஸ்(36), விக்னேஷ்(26) மற்றும் மகேந்திரன்(22) ஆகியோருடன் இணைந்து படுகொலை செய்தாக தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து கொலையாளிகள் ஒன்றாக திண்டுக்கல் அருகே பதுங்கி இருந்தபோது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 11 பேரும் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக அனைவருக்கும் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.