ETV Bharat / state

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு - காவல்துறை விசாரணை! - dindugul latest news

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

pasupathi-pandian-murder-case
pasupathi-pandian-murder-case
author img

By

Published : Sep 29, 2021, 7:48 AM IST

திண்டுக்கல்: பழைய கரூர் சாலையில் அமைந்துள்ள நந்தவனப்பட்டியில் 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் மூவர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 15 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியான நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி (60) என்பவரை செப்டம்பர் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனி டேவிட் நகர் அருகே வைத்துக் கொலை செய்தனர்.

பெண் வெட்டிக் கொலை

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நிர்மலா தேவியை கொலை செய்த கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த அய்யனார்(21), நடராஜன்(45), பூபாலன்(21) ஆகிய 3 பேரை கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். பின்னர் 3 பேரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த ஐந்து பேர்

மேலும் இந்த கொலை வழக்கில் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(33), மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலி கருப்பன்(28), செம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(22), அம்புலிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த முத்துமணி(23), செம்பட்டி நாயுடு காலனியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி(18) ஆகிய ஐந்து பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில் திருச்சி சிறையில் உள்ள ஐந்து பேரும் செப்டம்பர் 27ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்டு திண்டுக்கல் 2ஆவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

காவல்துறை விசாரணை

இதையடுத்து ஐந்து நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதிக்கும்படி தாடிக்கொம்பு காவல்துறை நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஆனால் மூன்று நாள்கள் மட்டுமே காவல்துறையினர் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கார்த்திக் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஐந்து பேரையும் காவலில் எடுத்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் - அனுமதியளித்தார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.