ETV Bharat / state

ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு - DMK Councilors walk out

திண்டுக்கல்: ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு
author img

By

Published : Oct 13, 2020, 4:51 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுகவில் 6, அதிமுகவில் 10 , சுயேட்சைகள் 3 முறையே கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவரின் ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான நிதி ஒதுக்கி பல்வேறு பணிகள் நடைபெறுவதாகவும், திமுக கவுன்சிலர்களின் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அதேபோல் பசுமை வீடு ஒதுக்கீட்டில் திமுக கவுன்சிலர்களின் பரிந்துரைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு அந்த ஊராட்சிகளில் ஒரு வீடு கூட ஒதுக்கவில்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.

நிலக்கோட்டை ஊராட்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுவது குறித்து பேச திமுக கவுன்சிலர்கள் வாய்ப்பு கேட்டு அலுவலர்களிடம் முறையிட்டனர். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளரும் கவுன்சிலருமான நல்லதம்பி குறுக்கிட்டு, ஆளுங்கட்சியினர் அப்படித்தான் செயல்படுவோம் முடிந்தால் உள்ளே இருங்கள், இல்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறி திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வாக்குவாதம்!

இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிமுக ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களைக் கண்டித்து முழக்கமிட்டபடி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது‌‌.

இதையும் படிங்க:ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மீது தாக்குதல் - காவல் துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.