ETV Bharat / state

திமுக, அதிமுக மனுக்கள் தள்ளுபடியால் சுயேச்சை வேட்பாளர் வெற்றி! - மக்கள் போராட்டம் - திமுக அதிமுக மனுக்கள் தள்ளுபடி

பழனி அருகே திமுக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, சுயேச்சையாக மனு தாக்கல்செய்தவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை அரசிடமே ஒப்படைக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக அதிமுக மனுக்கள் தள்ளுபடியால் சுயேட்சை வேட்பாளர் வெற்றி!- மக்கள் போராட்டம்

author img

By

Published : Feb 8, 2022, 11:32 AM IST

திண்டுக்கல்: பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சி ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீரனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர்.

இதில் குறிப்பாக 15ஆவது வார்டு பகுதியில் அருந்ததி இனமக்கள் அதிகளவில் இருப்பதால் திமுக, அதிமுக சார்பில் அருந்ததி இனத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு திமுக சார்பில் அருக்காணியும், அதிமுக சார்பில் லட்சுமி என்பவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல்செய்தனர்.

இந்நிலையில் இன்று கீரனூர் பேரூராட்சியில் 15ஆவது வார்டில் போட்டியிடும் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்செய்திருந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்திருந்த அமராவதி என்பவர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து 15ஆவது வார்டில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளைத் திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக அதிமுக மனுக்கள் தள்ளுபடியால் சுயேச்சை வேட்பாளர் வெற்றி! - மக்கள் போராட்டம்

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், “கீரனூர் பேரூராட்சிக்குள்பட்ட 15ஆவது வார்டில் அருந்ததியினர் அதிகளவில் வசித்துவருகின்றனர். அதனாலேயே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் போட்டியிட அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.

எங்கள் இனத்திற்குத் துரோகம்!

இந்நிலையில் தங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் காரணமின்றி நிராகரிக்கப்பட்டு, 15ஆவது வார்டுக்குச் சம்பந்தமில்லாத, வேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை அதுவும் திமுகவைச் சேர்ந்த பெண்ணை தங்களது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யவைத்து, அவரே போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது இது எங்களது சமூகத்திற்குச் செய்யும் துரோகம்” எனக் கூறினர்.

எனவே தங்களது வார்டில் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டுமெனவும், இல்லையென்றால் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைப்பதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த கீரனூர் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆதரவும் வேண்டாம் கூட்டணியும் கிடையாது - விஜய் மக்கள் இயக்கம் அதிரடி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.