ETV Bharat / state

ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் வியாபாரிகள்

author img

By

Published : Sep 23, 2019, 7:30 PM IST

திண்டுக்கல்: வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்பட்ட சாலையோரக் கடைகளை மீண்டும் அமைக்க அனுமதியளிக்கக் கோரி, வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

street vendors protest

கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இதனால் இந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் சாலையோரங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

இந்நிலையில், சாலையோரக் கடைகளை கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அகற்றியுள்ளனர்.

கடைகளை அகற்றியதால் சாலையோர வியாபாரிகள் வியாபாரமின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:திண்டுக்கல் 23.9.19

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சாலையோர கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றுவதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:கொடைக்கானல் அருகே வெள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான சுற்றுலா தளமான இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் சாலையோரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சாலையோர கடைகளை கொடைக்கானல் நெடுஞ்சாலைதுறையினர் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர். இந்த கடைகளை அகற்றியதால் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் இன்றி தவித்து வருவதால் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.