ETV Bharat / state

கொடைக்கானலில் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா? - kodaikanal road damage due to Gaja Cyclone

திண்டுக்கல்: கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் கஜா புயலால் சேதமடைந்த பாலத்தினையும், சாலையையும் நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

road damage
kodaikanal road damage
author img

By

Published : Mar 4, 2020, 8:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் உள்ள குருசரடி பகுதியில் 2018ஆம் ஆண்டு கஜா புயலில் மண்சரிவு ஏற்பட்டு பாதை துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு பாலமும் சாலையும் சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த சாலையில் அதிக வாகனங்கள் வந்து செல்வதால் மணல் மூட்டைகள் சரிந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் மற்றும் எம் சேண்ட் மூட்டைகள் வெயிலின் தாக்கத்தால் கிழிந்து வலுவிழந்து காணப்படுகிறது.

கஜா புயலால் சேதமடைந்த பாலம்

எதிர்வரக்கூடிய கோடை விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இந்த பிரதான சாலையில் பயணிக்க உள்ளனர். இதனை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையும் இணைந்து பாலம் பாதிக்கப்பட்ட இடத்தில் நிரந்தரமாக புதிய பாலம் கட்ட துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பாரம்பரிய பருத்தியை மீட்டெடுக்கும் ஜப்பானியப் பெண்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.