திண்டுக்கல்: வீடு கட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடைக்கானல் ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா புகாரளித்திருந்தார். இது தொடர்பாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் பாபி சிம்ஹா வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கொடைக்கானல் பழனி சாலையில் பெருமாள் மலையை அடுத்து உள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நடிகர் பாபி சிம்ஹா. தனது பெற்றோர்களுக்கு வீடு கட்டடுவதற்காக ஜமீர் என்பருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஜமீர் வெளிநாட்டில் இன்ஜினியரிங் படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 1 கோடியே 30லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தருவதாக பாபி சிம்ஹாவிடம், ஜமீர் ஒப்பந்தம் செய்துள்ளனர். பின்பு கூடுதலான பணிகள் செய்ய வேண்டி உள்ளது எனக்கூறி 1.70 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.
ஆனால் வீட்டின் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாபி சிம்ஹா வீட்டின் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்ற கூறியுள்ளார். இதற்கு ஒப்பந்ததாரரான ஜமீர் மேலும் கூடுதலாகப் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வீட்டின் பணிகளை பாதியிலே விட்டுவிட்டு பாதியிலேலே ஒப்பந்தாரரான ஜமீர் வெளியேறி விட்டார்.
இது சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து இது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாபி சிம்ஹா தரப்பு விளக்கத்தைக் கேட்டு கொடைக்கானல் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் பாபி சிம்ஹா தரப்பு வழக்கறிஞர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர்.
இது பற்றி பாபி சிம்ஹா தரப்பு வழக்கறிஞர் பாலு கூறியதாவது, காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. பாபி சிம்ஹா இங்கு இல்லாததா காரணத்தால் எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பாக விளக்கத்தை அளித்துள்ளோம். ஜமீர் தரப்பினர் எங்கள் மீது பொய் புகார் அளித்து உள்ளனர் என்று விளக்கம் அளித்து உள்ளோம். இந்த சம்பந்தமாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
ஜமீர் தரப்பில் உள்ளவர்கள் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பொய்யான தகவல்களை அளித்து வருகின்றார். மீண்டும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இதுபோன்று பொய்யான தகவல்களை கூறினால் அவர்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பிரச்சனை தற்போது கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கிய ஊழியர் - கோவையில் பரபரப்பு!