ETV Bharat / state

கல்வி அலுவலக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை! - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Headmaster
author img

By

Published : Nov 22, 2019, 3:49 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 19ஆம் தேதி ஜான்பால் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, குஜிலியம்பாறை ஆர்.வெள்ளோடு அடுத்துள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால் தனக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அவருக்கு பணியிட மாறுதல் மறுக்கப்பட்டது. இதனால் திடீரென தலைமை ஆசிரியை இந்திரா கலந்தாய்வு நடந்த அறையிலேயே தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தியதையடுத்து இந்திரா தர்ணா போராட்டத்தைக் கைவிட்டார்.

தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையாசிரியை இந்திராவைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியை இந்திரா பழனி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது தன்னை பணி நீக்கம் செய்ததைத் திரும்பப் பெறும் வரை இந்த இடத்தை விட்டு வெளியேறப் போவதில்லை எனக் கூறி தலைமை ஆசிரியை இந்திரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியை இந்திராவை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில் போராட்டம்!

Intro:திண்டுக்கல் 21.11.19

திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் தலைமை ஆசிரியை தர்ணா போராட்டம்.
Body:திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் கடந்த 19.11.19 திண்டுக்கல்லில் உள்ள ஜான்பால் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை R.வெள்ளோடு அடுத்துள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால் தனக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மணிவண்ணனிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் தலைமை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் வழங்க மறுக்கப்பட்டது. இதனால் திடீரென தலைமை ஆசிரியை இந்திரா கலந்தாய்வு நடந்த அறையிலேயே தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தவும் தர்ணாவை கைவிட்டார். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியை இந்திராவை திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியை இந்திரா திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்து அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னை பணி நீக்கம் செய்ததை திரும்ப பெறும் வரை இந்த இடத்தை விட்டு வெளியேற போவதில்லை என கூறி தலைமை ஆசிரியை இந்திரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியை இந்திராவை விசாரணைக்காக மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.