ETV Bharat / entertainment

திருநங்கை நடிகை முதல் இந்திய குறும்படம் வரை... ஆஸ்கர் 2025 விருது பரிந்துரை பட்டியல் ஸ்பெஷல்! - OSCAR NOMINATIONS 2025

Oscar Nominations 2025: ஆஸ்கர் 2025 விருதிற்கு Emilia perez என்ற ஸ்பானிஷ் மொழித் திரைப்படத்திற்காக திருநங்கை நடிகை karla sofia gascon பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

Emilia perez, Anuja பட போஸ்டர்ஸ்
Emilia perez, Anuja பட போஸ்டர்ஸ் (Photo: Film psoters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 24, 2025, 1:04 PM IST

ஹைதராபாத்: ஆஸ்கர் 2025 விருதுகளுக்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பானிஷ் மொழித் திரைப்படமான ’Emilia perez’ 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆங்கிலம் அல்லாத பிற மொழித் திரைப்படங்களில் அதிகளவில் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

Emilia perez சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் விருதுக்காக jacques audiard, சிறந்த நடிகை sofia gascon, சிறந்த துணை நடிகை Zoe saldana, சிறந்த தழுவிய திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Emilia perez படத்தின் சிறப்பம்சங்கள்

மியூசிக்கல் டிராமா ஜானரில் உருவாகியுள்ள Emilia perez என்ற ஸ்பானிஷ் திரைப்படம் திருநங்களைகள் குறித்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள Emilia perez திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட ’Roma’ என்ற படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

Emilia perez படத்தை எங்கு பார்க்கலாம்?

Emilia perez திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இப்படம், ஆஸ்கர் பரிந்துரைக்கு பிறகு பிரபலமடைந்துள்ளது. சிறந்த காமெடி மற்றும் இசை ஆகிய பிரிவுகளில் ஏற்கனவே கோல்டன் குளோப் விருது வென்றுள்ள Emilia perez திரைப்படம், சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த திரைப்படப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள்:

  • Emilia Pérez (13 nominations)
  • Wicked (10 nominations)
  • The Brutalist (10 nominations)
  • Anora (6 nominations)
  • Conclave (8 nominations)
  • A Complete Unknown (8 nominations)
  • Dune: Part Two
  • Nickel Boys
  • The Substance
  • I’m Still Here

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகைகள்

இந்த பிரிவில் Emilia perez என்ற படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள karla sofia gascon ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார்.

  • Cynthia Erivo - Wicked
  • Karla Sofía Gascón - Emilia Pérez
  • Mikey Madison - Anora
  • Demi Moore - The Substance
  • Fernanda Torres - I'm Still Here

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகர்கள்:

சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் The Apprentice படத்திற்காக நடிகர் Sebastian Stan பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இப்படம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், அவரது ரியல் எஸ்டேட் விவகாரங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

  • Adrien Brody - The Brutalist
  • Timothée Chalamet - A Complete Unknown
  • Colman Domingo - Sing Sing
  • Ralph Fiennes - Conclave
  • Sebastian Stan - The Apprentice

சிறந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கான பிரிவில், the wild robot, memoir of a snail, inside out 2, ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் inside out 2, மற்றும் pixar ஆகிய படங்கள் மட்டுமே இம்முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்திய குறும்படம்

இந்தியா சார்பில் இம்முறை 'Anuja' என்ற குறும்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை ப்ரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா (guneet monga) ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர் குனீத் மோங்கா மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக The Elephant Whisperers, மற்றும் Period: End of Sentence ஆகிய ஆவணப் படங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சிறந்த குறும்படம் பிரிவில் Alien, Im Not a robot, the last ranger, A man who wolud not remain silent ஆகிய படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் நுழைந்த இந்திய குறும்படம் ’அனுஜா’ - ANUJA SHORT FILM IN OSCAR 2025

ஆஸ்கர் விருது குழு சந்திக்கும் சவால்கள்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடும் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆஸ்கர் விருது வழங்கு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்முறை 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.