மகா சிவராத்திரி தினத்தில், பக்தர்கள் ஒரு நாள் இரவு முழுவதும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டு, பழங்கள் மற்றும் எளிமையான இனிப்பு வகைகளை கொண்டு விரதத்தை முடிப்பார்கள். பெரும்பாலான மக்கள், சிவ பெருமானுக்கு பிடித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து உண்ணும் வழகத்தை பின்பற்றுவார்கள். அதன்படி, இம்முறை சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக சுவையான பாயாசம் செய்து சிவனுக்கு நைவேத்தியம் படைத்து நீங்களும் உண்டு மகிழுங்கள். பக்குவமாக சர்க்கரை வள்ளி கிழங்கு பாயாசம் எப்படி செய்வது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- சர்க்கரை வள்ளி கிழங்கு -2
- பால் - 3 கப்
- வெல்லம் - அரை கப்
- நெய் -தேவையான அளவு
- சாரப் பருப்பு - தேவையான அளவு
- முந்திரி, பாதாம், திராட்சை- தேவையான அளவு
சர்க்கரை வள்ளி கிழங்கு பாயாசம் செய்யும் முறை:
- முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அரை கப் வெல்லம் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் பாகு காய்ச்சவும். வெல்லம் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும், வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். பின், இரண்டு மீடியம் சைஸ் சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி, துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து , சூடானதும் 1 டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரி, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் உங்களுக்கு பிடித்த ட்ரை பூருட்ஸ்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின், தேவையான அளவு சாரப் பருப்பு சேர்த்து கருகவிடாமல் வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர், அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு துருவி வைத்த சக்கரவள்ளி கிழங்கை சேர்த்து கொள்ளவும். கிழங்கு நிறம் மாறி,பாதி வெந்தவுடன் பால் சேர்த்து 4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும். பாலில், கிழங்கு நன்றாக வெந்து, குளைந்து பால் கட்டியாக வரும் வரை காத்திருக்கவும்.
- அடுத்ததாக, பாயாசத்தில் உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வேக விடுங்கள். கடைசியாக, வெல்லப் பாகை பாலில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் ஒரு கொதி வந்தவுடன் தீயை அனைத்துவிடவும்.
- இறுதி கட்டமாக நெயில் வறுத்து வைத்த ட்ரை பூருட்ஸை கலவையில் போட்டல் சிவ பெருமானிற்கும் நமது உள்ளத்திற்கு இன்பம் தரும் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம் ரெடி.
டிப்ஸ்: ரெடியான பாயசத்தை சூடாக சாப்பிடுவதை விட ஃப்ரிட்ஜ்ல் வைத்து குளு குளுவென சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க... |
இதையும் படிங்க:
கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம்...ஈவினிங் டீ-க்கு பெஸ்ட் காம்பினேஷன்!