ETV Bharat / state

வெறிச்சோடிய அதிமுக பொதுக்கூட்டம்: நிர்வாகிகள் அதிருப்தி!

author img

By

Published : Mar 1, 2020, 2:16 PM IST

திண்டுக்கல்: பழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியினர் உள்பட யாரும் கலந்துகொள்ளாமல் வெறிச்சோடி காணப்பட்டதால் முக்கிய நிர்வாகிகள் பெரும் அதிருப்தியடைந்தனர்.

forest minister meeting in dindigul, பழனியில் வனத்துறை அமைச்சர் கலந்து கொண்ட கூட்டம், திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்புச் செயலர் வைகைச்செல்வன்
பழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம்

பழனியில் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா குறித்தும், மாநில நிதிநிலை அறிக்கை குறித்தும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேணுகோபால், செல்லச்சாமி, சுப்புரத்தினம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு கூட்டம் சேர்ப்பதற்காக மாலை முதல் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் அமைச்சர் வந்தபிறகு கூட்டம் தொடங்கியது. அதன் பின்னரும் கூட்டத்திற்கு அதிமுக கட்சியினர் உள்பட யாரும் வராததால் கூட்டம் வெறிச்சோடி நாற்காலிகள் காலியாகக் கிடந்தன.

இதனால் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர். கூட்டத்திலிருந்த ஒரு சிலரும் கிளம்பும்போது நிர்வாகிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி அமரவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.