ETV Bharat / state

தலை சுமையாக கொண்டு செல்லப்பட்ட உணவு பொருட்கள் - Mountain village within the forest area

திண்டுக்க‌ல்: சாலை வசதிகள் இல்லாத வன கிராமங்களுக்கு தலை சுமையாகவும், குதிரைகள் மூலமும் உணவு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன.

குதிரைகள் மூலம் கொண்டு செல்லப் பட்ட உணவு பொருட்கள்

author img

By

Published : Apr 7, 2020, 3:18 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சுற்றுலா தலங்களில் மிகவும் பிரபலமானது. இங்குள்ள மக்களுக்கு சுற்றுலா சார்ந்த தொழில்களே வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சுற்றுலாவுக்காக வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

குதிரைகள் மூலம் கொண்டு செல்லப் பட்ட உணவு பொருட்கள்
குதிரைகள் மூலம் கொண்டு செல்லப் பட்ட உணவு பொருட்கள்

பின்னர் 144 தடை உத்தரவு காரணமாகவும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் இங்குள்ள பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொடைக்கானல் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இங்கு சாலை வசதிகளின்றி வனப்பகுதிக்குள் உள்ள மலை கிராமங்களிலும் மக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது அரசு வழங்கும் நிவாரண உதவி தொகையும், உணவு பொருட்களும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

தலை சுமையாக கொண்டு செல்லப் பட்ட உணவு பொருட்கள்

இதனையடுத்து அரசுத் துறை அலுவலர்கள் தலைமையில் காவல் துறையினர் உணவுப் பொருட்களை ஜீப் மூலம் வட்டகானல் என்ற கிராமம்வரை சென்றது. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்களை அளித்துவிட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் வெள்ளக்கவி கிராமத்திற்கு உணவுப் பொருட்களை தலை சுமையாகவும், குதிரைகளின் மேல் மூட்டைகளை அடுக்கி எடுத்து நடந்து சென்றடைந்தனர்

பின்னர் அங்கிருந்த மலைவாழ் கிராம மக்கள் அனைவருக்கும் அரிசி, ப‌ருப்பு, நிவாரண தொகைகள் என அனைத்தும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி - காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.