ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்: கொடைக்கானலில் முதல்முறையாக திமுக பெண் தேர்வு - kodaikanal local body election details

திண்டுக்கல்: கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை 10 ஆண்டுகளுக்கு பின் திமுக கைப்பற்றியது. முதல் பெண் தலைவராக சுவேதா ராணி போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார்.

kodaikanal local body election
kodaikanal local body election
author img

By

Published : Jan 12, 2020, 9:32 AM IST

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. 12 கவுன்சிலரில் திமுகவைச் சேர்ந்த ஏழு பேர் வெற்றிபெற்றதன் மூலம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவியை அக்கட்சி கைப்பற்றியது.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பெரியூர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரான ஸ்வேதா ராணி கணேசன் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார். இதனால் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக முதல்முறையாக பெண் தலைவர் தேர்வுசெய்யப்பட்டார்.

அதற்குரிய சான்றிதழை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வழங்கினார். துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த முத்துமாரி போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். தொடர்ந்து கொடைக்கான‌ல் கூக்கால் ஊராட்சியில் துணைத் த‌லைவ‌ரை தேர்ந்தெடுக்கும் தேர்த‌லில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதில் ஆறு உறுப்பின‌ர்க‌ள் எதிர்ப்புத் தெரிவித்தும் மூன்று உறுப்பின‌ர்க‌ள் ஆதரவுகொண்ட‌ ராஜ‌ம்மாள் என்ப‌வ‌ரைத் துணைத் த‌லைவராக‌த் தேர்த‌ல் ந‌ட‌த்தும் அலுவலர் தேர்ந்தெடுத்திருப்ப‌தாக‌க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ம‌றுதேர்த‌ல் ந‌ட‌த்துமாறு எதிர்ப்பு தெரிவித்த ஆறு உறுப்பினர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர். அத்துடன் தங்களது கோரிக்கை மனுக்களை கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர்.

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக முதல்முறையாக திமுக பெண் தேர்வு

இதேபோல தாண்டிக்குடி கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் புதிய உறுப்பினர்கள் வராத காரணத்தினால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றி கொடைக்கானல் தேர்தல் அலுவலர் சுரேந்திரன் கூறியதாவது, கூக்கால் ஊராட்சி மன்றத் தேர்தலில் துணைத் தலைவர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தாண்டிக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒன்றியச் செயலாளருக்கான தேர்தலை மீண்டும் நடத்த கோரிக்கை

Intro:திண்டுக்கல் 11.1.20

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை 10 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க கைப்பற்றியது. முதல் பெண் தலைவராக சுவேதா ராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Body:கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. 12 கவுன்சிலரில் 7 பேர் தி.மு.கவினர் வெற்றி பெற்று கொடைக்கானல் ஊராட்சிஒன்றிய பெருந்தலைவர் பதவியை தி.முக. கைப்பற்றியது.

கொடைக்கானல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெரியூர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆன ஸ்வேதா ராணி கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக முதல் முறையாக பெண் தலைவர் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு உரிய சான்றிதழை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வழங்கினார். துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த முத்துமாரி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கொடைக்கான‌ல் கூக்கால் ஊராட்சியில் துணைத‌லைவ‌ர் தேர்தெடுக்கும் தேர்த‌லில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதில் 6 உறுப்பின‌ர்க‌ள் எதிர்ப்பு செய்தும் 3 மூன்று உறுப்பின‌ர்க‌ள் ஆதரவு கொண்ட‌ ராஜ‌ம்மாள் என்ப‌வ‌ரை துணைத‌லைவராக‌ தேர்த‌ல் ந‌ட‌த்தும் அதிகாரி தேர்ந்து எடுத்திருப்ப‌தாக‌ ம‌ற்ற‌ உறுப்பின‌ர்க‌ள் குற்ற‌சாட்டு. ம‌று தேர்த‌ல் ந‌ட‌த்த‌ எதிர்ப்பு தெரிவித்த ஆறு உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளன.ர்அத்துடன் தங்களது கோரிக்கை மனுக்களை கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர்.

இதேபோல தாண்டிக்குடி கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் புதிய உறுப்பினர்கள் வராத காரணத்தினால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றி கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரன் கூறியதாவது, கூக்கால் ஊராட்சி மன்றத் தேர்தலில் துணைத் தலைவர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தாண்டிக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்று கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.