ETV Bharat / state

தொடர் மழையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயம் பாதிப்பு! - கொடைக்கானல்

அண்மைக் காலங்களாகப் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை முறையாகப் பராமரிக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மழை பாதிப்புகள்
மழை பாதிப்புகள்
author img

By

Published : Apr 15, 2022, 10:54 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மிதமான மழையும் கனமழையும் பெய்து வருகிறது.

இதன் காரணமாக குளு குளு காலநிலை நிலவி வருகிறது. கொடைக்கானலைச் சுற்றி இருக்கக்கூடிய மலைக்கிராமங்களான பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, மன்னவனூர், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரதானமாக விவசாயமே செய்து வருகிறார்கள்.

மலையில் விளையும் காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பூண்டு உள்ளிட்டவை இங்கு விளைவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த பகுதியில் விவசாயத்திற்காகப் பயிரிடப்பட்ட பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் காய்கறிகளை எடுத்தாலும் அதனை முறையாகப் பராமரிக்கப்பட முடியாமலும் விலை குறைவாக செல்வதாலும் விவசாயிகள் வேதனை அடைந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சைக்கிள் படகு அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.