ETV Bharat / state

ஒருங்கிணைந்த விவசாய பண்ணைத் திட்டம்: விவசாயிகளின் லாபம் பெருகும் - வேளாண்மைத் துறை

திண்டுக்கல்: அரசு கொண்டுவரப் போகும் ஒருங்கிணைந்த விவசாய பண்ணைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும் என வேளாண்த் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

விவசாய கண்காட்சி
author img

By

Published : Aug 9, 2019, 4:24 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன விவசாயம் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர், வேளாண்த் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் இக்கண்காட்சியை தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்த் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், " தமிழ்நாடு அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்த் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள சூழலில் விவசாயிகள் சந்திக்கும் மிகப்பெரிய சிரமம் ஆட்கள் பற்றாக்குறை தான். இப்பிரச்னையை களையும் வண்ணம், நவீன வேளாண் கருவிகள் மூலம் விவசாயம் செய்து விவசாயிகள் பயன்பெறுவதற்காக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாய கண்காட்சி

இதேபோன்று, ஒருங்கிணைந்த விவசாய பண்ணைத் திட்டம் ஐந்து மாவட்டங்களில் செயல்படும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் விவசாயிகள் விவசாயத்தோடு கால்நடைகளுக்கான ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்டவைகளை வளர்த்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.

அதேபோல குறைந்த நீரில் வளரக்கூடிய கம்பு, திணை உள்ளிட்ட தானியங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால், அவற்றை அதிக அளவில் பயிரிட வேண்டும்" என்றார்.

Intro:திண்டுக்கல் 8.8.19

விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் : வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி

Body:திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன விவசாயம் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, "தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள சூழலில் விவசாயிகள் சந்திக்கும் மிகப் பெரிய சிரமம் ஆட்கள் பற்றாக்குறை தான். இதனை களையும் வண்ணம் நவீன வேளாண் கருவிகள் மூலம் விவசாயம் செய்து பயன்பெறுவதற்காக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒருங்கிணைந்த விவசாய பண்ணை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இத்திட்டம் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் செயல்படும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் விவசாயிகள் விவசாயத்தோடு கால்நடைகளுக்கான ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்டவை வளர்த்து தங்களின் லாபத்தை உறுதி செய்து கொள்ள இயலும்.

மேலும், விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். அதேபோல குறைந்த நீரில் வளரக்கூடிய கம்பு தினை உள்ளிட்ட தானியங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. அவற்றை அதிக அளவில் பயிரிட வேண்டும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விவசாயத்திற்கு உதவக்கூடிய இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.