திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழாவை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதனை திண்டுக்கல்லில் வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சுமார் 2 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடம், பயிற்சி மைதானம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
பின்னர் பேசிய வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். அதன்படி பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் மாற்று அலுவலகம் வேண்டும் என்று கூறியவுடன் உடனடியாக சுமார் 2.11 லட்சம் மதிப்பீட்டில் இதற்கான அரசாணையை வெளியிட்டார் என்று கூறினார்.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் மோடி- பாஜக... அப்போ அதிமுக?