திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிழைப்புக்காக குல்பி ஐஸ் விற்பனை செய்தும் ஹோட்டல்களில் வேலை செய்தும் வந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வேலை இழந்த உத்திரப் பிரதேச மாநில தொழிலாளர்கள், போதிய வருமானம் இல்லாமலும், தங்கியுள்ள இடத்திற்கு வாடகை செலுத்த முடியாமலும் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர்.
தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கூறி வருவாய் துறையினரிடம் கடந்த இரண்டு மாதங்களாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பழனி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி தாலுக்கா அலுவலர் விரைவில் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநில தொழிலாளர்களின் திடீர் முற்றுகை போராட்டத்தால் தாலுக்கா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தேனி ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கோரி மா.கம்யூ கண்டன ஆர்ப்பாட்டம்!