திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த குணாளன் என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மனைவி கலா கடைக்குச் சென்று விட்டு, தனது வீட்டிற்குத் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கலா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு சென்ற காவல்துறையினர் அருகில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டுச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொன்று புதைக்கப்பட்ட தம்பதி... சொத்துக்காக சொந்த குடும்பமே வெறிச்செயல்!