திண்டுக்கல்: சேலத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரியில் சரக்குகளை ஏற்றிச் சென்று, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கிவிட்டு மீண்டும் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வேடசந்தூர் அருகே காக்கா தோப்பு பிரிவு என்ற இடத்தில் சார்லஸ் ஓட்டிவந்த லாரியின் வலதுபக்க டயர் வெடித்ததன் காரணமாக அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகளின் மீது ஏறி சாய்ந்து நின்றது.
இதில், நல்வாய்ப்பாக லாரி அருகே இருந்த பள்ளத்தில் கவிழாமல் சாய்ந்து நின்றதால் ஓட்டுநர் சார்லஸ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!