ETV Bharat / state

தனியார் பேருந்து - ஆம்னி வேன் மீது மோதிய விபத்து: பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி காட்சி! - தனியார் பேருந்து ஆம்னி வேன் மீது மோதிய சிசிடிவி காட்சி

திண்டுக்கல் அருகே ஆத்தூர் ஆதிலட்சுமிபுரம் பிரிவில் தனியார் பேருந்து ஆம்னி வேன் மீது மோதியதில் ஆம்னி வேனில் வந்த அண்ணாமலை மற்றும் அவரது உறவினர்கள் நல்வாய்ப்பாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

தனியார் பேருந்து ஆம்னி வேன் மீது மோதிய சிசிடிவி பதைபதைக்கும் காட்சி..!

author img

By

Published : Jun 6, 2022, 4:06 PM IST

திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவுக்குச் சொந்தமான சித்தையன்கோட்டை பகுதியைச்சேர்ந்தவர் அண்ணாமலை. தனது ஆம்னி நான்கு சக்கர வாகனத்தில் அவரது உறவினர்களுடன் சித்தையங்கோட்டையில் இருந்து ஆதி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள உறவினரின் விசேஷத்திற்காக சென்றுள்ளார்.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் வரும்பொழுது சாலை விதிமுறைகளை பின்பற்றாமலும்; பின்புறம் வரும் வாகனத்தைப் பார்க்காமலும் தான் ஓட்டி வந்த வாகனத்தை உடனடியாக சாலையின் மறுபகுதிக்கு திருப்பியுள்ளார். அப்பொழுது அய்யம்பாளையம் பகுதியில் திண்டுக்கல் செல்லும் தனியார் பேருந்து ஆம்னி வேன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் ஆம்னி வேன் சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில் சாலையோரக் கடையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் ஆம்னி வேனில் வந்த அண்ணாமலை மற்றும் அவரது உறவினர்கள் நல்வாய்ப்பாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாகனம் ஓட்டியதால் அதிக அளவு விபத்து நடைபெறுகிறது.

ஆகவே, திண்டுக்கல் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அனைத்துப்பகுதிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்; காவல் துறை ஆய்வு செய்ய வேண்டும்; மேலும் ஆதிலட்சுமிபுரம் பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுவதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தனியார் பேருந்து ஆம்னி வேன் மீது மோதிய சிசிடிவி பதைபதைக்கும் காட்சி..!

இதையும் படிங்க:அரசுப்பேருந்து மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.