விரயமாகும் நீர்: குடிநீர் குழாயை உடைத்த ஊரகப் பணியாளர்கள்! - எரியோடு - குஜிலிம்பாறை சாலையில் விரயமாகும் நீர்
திண்டுக்கல்: எரியோடு - குஜிலிம்பாறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை ஊரக வேலைத்திட்ட பணியாளர்கள் உடைத்ததால் அதிகப்படியான நீர் வீணாகிவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 432 கோடி ரூபாய் செலவில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய், தண்ணீர் ஏற்றும் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.
இந்நிலையில் நத்தம் பகுதி குடிநீர் வசதிக்காக எரியோடு-குஜிலிம்பாறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாயை கோவிலூர் ஊராட்சி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உடைத்ததால் நீர் வீணாகிவருகிறது. குடிநீர் குழாயை அலட்சியப் போக்குடன் உடைத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படியுங்க:
குடிநீர் குழாய் உடைந்து எரிமலை போல் கொப்பளிக்கும் தண்ணீர்
கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் அடிக்கடி நிகழும் உடைப்பு - நீர் வீணாகும் அவலம்!
எரியோடு-குஜிலியம்பாறை சாலையில் உள்ள கோவிலூரில் இருந்து நத்தம் பகுதிக்குச் செல்லும் காவேரி கூட்டுக் குடிநீர் இராட்சத குழாய் உடைந்து பல இலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம்.
Body:திண்டுக்கல் 28.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி
எரியோடு-குஜிலியம்பாறை சாலையில் உள்ள கோவிலூரில் இருந்து நத்தம் பகுதிக்குச் செல்லும் காவேரி கூட்டுக் குடிநீர் இராட்சத குழாய் உடைந்து பல இலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது குஜிலியம்பாறை தாலுகா. இங்குதான் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 432 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது காவேரி கூட்டுக் குடிநீர்
தண்ணீர் ஏற்றும் நிலையம் அமைக்கபட்டது. இங்கிருந்து திண்டுக்கல், நத்தம்,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் இராட்சத குழாய் மூலம் தினமும் பல இலட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. எரியோடு -குஜிலிம்பாறை சாலையில் நத்தம் பகுதி குடிநீர் வசதிக்காக இராட்சத குழாய் மூலம்குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கிருந்து நத்தம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு தண்ணீர் அனுப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இன்றி பொதுமக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் .
காவேரி கூட்டு குடிநீர் தொட்டிக்கு குஜிலியம்பாறையில் இருந்து தண்ணீர் ஏற்றும் இராட்சத குழாய் பைப்பை கோவிலூர் ஊராட்சி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உடைத்ததால் நீர் தொடர்ந்து வெளியேறி வீணாகி அருகில் இருக்கின்ற சாலையில் வெள்ளம்போல் வீணாகி வருகிறது.
குடிநீர் இன்றி விலை கொடுத்து வாங்கும் நிலையில் குடிநீர் குழாயை அலட்சிய போக்குடன் கோவிலூர் ஊராட்சி தேசிய ஊரகவேலை பணியாளர்கள் உடைத்ததால் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்மேன பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..Conclusion:திண்டுக்கல் அருகே
எரியோடு-குஜிலியம்பாறை சாலையில் உள்ள கோவிலூரில் இருந்து நத்தம் பகுதிக்குச் செல்லும் காவேரி கூட்டுக் குடிநீர் இராட்சத குழாய் உடைந்து பல இலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம்
குறித்த செய்தி