ETV Bharat / state

ஃபேஸ்புக் காதல்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் - கனடா நாட்டுப் பெண்ணுக்கு கொடைக்கானலில் திருமணம்

திண்டுக்கல்: கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

author img

By

Published : Jan 12, 2020, 7:58 PM IST

கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர்.

முகநூல் காதல்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு கொடைக்கானலில் திருமணம்

இதனையடுத்து இவர்களின் திருமணம் இன்று கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. இதில் இருவீட்டாரும் கிராம பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

இத்திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொதுமக்கள் சார்பாக சைவ விருந்து வைக்கப்பட்டது. கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி தமிழ்நாட்டில் திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

மாட்டுவண்டியில் வந்து பொங்கல் திருவிழா கொண்டாடிய கிரண் பேடி!

Intro:திண்டுக்கல் 12.1.20

கனடா நாட்டைச் சேர்ந்த பெண்ணிற்கு இந்து முறைப்படி திருமணம்.

Body:கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளர். இவர் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்துள்ளார். அவருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் முகநூல் மூலம் காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதற்காக பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று உள்ளனர். இதனையடுத்து இவர்களின் திருமணம் இன்று கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. இதில் கிராம பொதுமக்கள் மற்றும் இருவீட்டார் திரளாக கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொதுமக்கள் சார்பாக சைவ விருந்து வைக்கப்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.