குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்லில் இச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் தாலுகா அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.
அப்போது இஸ்லாமியர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்