ETV Bharat / state

அதிமுக அரசு பாஜகவின் பொம்மை - சஞ்சய் தத் - பிரதமர் நநேரந்திர மோடி

திண்டுக்கல்: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்க்க திராணி இல்லாமல் மௌனம் காக்கும் அதிமுக அரசு, பாஜகவின் பொம்மை என்று காங்கிரஸ் கட்சி செயலளார் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்
author img

By

Published : Oct 28, 2020, 12:33 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் செயலரும் தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் தலைமை வகித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், "பிகாரில் புதிய அலை உருவாகும் என்பது உறுதி. பாஜக அரசு பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான அரசாகவே உள்ளது. சமீப காலங்களில் அதிகரித்துள்ள பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் விதமாக நவம்பர் 5 ஆம் தேதி பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான விரத தினமாக முன்னெடுக்கப்படும்.

மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது . வேளாண் திருத்தச்சட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களின் உழைப்பை பெரு முதலாளிகள் சுரண்டுவதற்கு வழிவகுக்கும்.

வேளாண் திருத்தச் சட்டம் செயற்கை உணவு தட்டுப்பாட்டை உருவாக்கி கள்ளச் சந்தைகள் செயல்பாடு அதிகரிக்க செய்யும். முன்னதாக உலகம் முழுவதும் எரிவாயு விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாகவே அனைத்து பொருட்களின் விலைகளும் ஏற்றம் பெறுகிறது. இதனை தடுத்திட பாஜக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக அரசு பாஜகவின் கட்டளைக்கு ஆடும் பொம்மையாகவே செயல்படுகிறது. தன்னை விவசாயி என முன்னிலைப்படுத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்க்க திராணி இல்லாமல் மௌனம் காப்பது ஏன். மத்திய மாநில அரசுகள் இரண்டுமே பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல் குற்றமிழைத்தவர்களின் பக்கம் துணை நிற்கிறது”.எனத் தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் தத், பிரியங்கா உள்பட அனைத்து கட்சி தொண்டர்களின் ஆவல் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்பதுதான் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.