திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்து அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டர்கள் தூங்கி விழுந்து கொண்டிருந்தனர். இது ஒருபுறமிருக்க மற்றொரு பக்கத்தில் நிகழ்ச்சிக்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கலந்துகொண்ட மக்களுக்கு பணம் வழங்குவதற்கு பதிலாக ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெற்ற இடத்திலேயே இந்த டோக்கன் விநியோகம் நடைபெற்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே பணம் விநியோகம் தொடங்கியதைத் தொடர்ந்து தேர்தல் வரை பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்க தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.