திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நடிகை சமந்தா வருகை தந்தார். படிப்பாதை வழியாக வந்த அவர், 600க்கும் மேற்பட்ட படிகளில் சூடம் ஏற்றிக்கொண்டே பழனி மலை கோயில் மேலே வந்து, ஆனந்த விநாயகரை வணங்கி விட்டு, பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகனை சாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனைகளோடும் மீண்டு வந்ததாகவும் கூறினார். மேலும், முழுமையாக உடல் நலம் பெற வேண்டி வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பழனி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாகத் தெரிவித்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவருடன் 96 திரைப்பட இயக்குநர் சி. பிரேம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் வந்திருந்தனர்.
இதையும் படிங்க: காந்தாரா பட பாடல் திருட்டு வழக்கு - நடிகர் ரிஷப் ஷெட்டியின் வாக்குமூலம் பதிவு!