திண்டுக்கல் மாவட்டம், காக்கா தோப்பு என்ற இடத்தில் உள்ள கரூர் தேசிய நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அலட்சியமாக சாலையை கடக்கின்றனர். இதனால் கடந்த ஆறு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் இங்கு நடந்துள்ளன.
இதனால் காவல் துறையினர் சார்பில் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதனை கவனிக்காமல் செல்கின்றனர்.
இந்நிலையில் வேடசந்தூர் சந்தைபேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் தேசிய நான்கு வழிசாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் மருதுபாண்டி இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் நின்றிருந்த தொழிலாளர்கள் 3 பேர் கார் மோதி உயிரிழப்பு!