கர்நாடக மாநிலத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு சொல்லும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து சுமார் 83 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நேற்று மாலை நீர்வரத்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் நீர்வரத்து தற்பொழுது குறைந்துள்ளது.
இருப்பினும் ஒகேனக்கல் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் அருவிகள் தண்ணீரில் மூழ்கி பறந்து விரிந்த காவிரி ஆறு வெள்ள காடாக காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் பரிசில் இயக்கவும் ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மாவட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றங்கரை ஓரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஎன்எஸ் சுமேதா இந்தோனேஷியாவுக்கு பயணம்