தர்மபுரி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 29 வரை, 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இதில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில்குமார் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். அது வைரல் ஆகி வருகிறது.
அதில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29ஆம் தேதி வரை நடக்கிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றம் பார்வையாளர்களுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை பார்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கு பாஸ் ஏற்பாடு செய்ய, எனக்கு #parliamentpass என்ற ஹேஷ்டேக் அனுப்பவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
-
Winter session of Parliament has started and goes on till the 29th of Dec
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The good news is after almost 3 years Parliament is open for Visitors with pass.
For those interested in watching the proceedings of the House,
Will arrange for pass
Send me a hashtag#parliamentpass
">Winter session of Parliament has started and goes on till the 29th of Dec
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 7, 2022
The good news is after almost 3 years Parliament is open for Visitors with pass.
For those interested in watching the proceedings of the House,
Will arrange for pass
Send me a hashtag#parliamentpassWinter session of Parliament has started and goes on till the 29th of Dec
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 7, 2022
The good news is after almost 3 years Parliament is open for Visitors with pass.
For those interested in watching the proceedings of the House,
Will arrange for pass
Send me a hashtag#parliamentpass
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில் குமார், கரோனா கட்டுப்பாடு அமலாவதற்கு முன்பு, நாடாளுமன்றம் நடைபெற்ற பொழுது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் ட்விட்டர் மூலம் அறிமுகமான நண்பர்களுக்கும் நாடாளுமன்றத்தைச் சுற்றி பார்க்க அனுமதிச் சீட்டு வாங்கிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "இளம் எம்.பிக்கள் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்" - பிரதமர் மோடி