தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறையின் மூலம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் ரூ.47.30 லட்சம் மதிப்பில் கூடுதல் அறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் சொல்வதற்காக நிவாரணம் கேட்க வேண்டிய அவசியமில்லை' - கே.பி.அன்பழகன்