தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு இன்று (டிச. 13) நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 28 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் பெண் தேர்வர்கள் நான்காயிரத்து ஒன்பது, ஆண் தேர்வர்கள் 21 ஆயிரத்து 753 என மொத்தம் 25 ஆயிரத்து 863 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
காலை 11 மணிக்கு தொடங்கி 12.30 வரை நடைபெற்றது. எழுத்துத் தேர்வு எழுதுவதற்காக ஆண், பெண் தேர்வர்கள் காலை முதலே ஆர்வத்தோடு தேர்வு மையத்திற்கு வந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் எழுத்து தேர்வு நடைபெறுகின்ற மையத்தினை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் நேரில் சென்று ஆய்வுசெய்தார். இந்த ஆய்வில் தேர்வு மையங்களுக்குச் சென்ற டிஐஜி பிரதீப்குமார் தோ்வு எழுத வராதவர்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு போதிய வசதி இருக்கின்றனவா என்பதை குறித்து ஆய்வுசெய்தார். இந்த ஆய்வில தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. பிரவேஷ்குமார் உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சித்ராவின் முதல் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரசிகர்கள் வேதனை