தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாக்கனூர் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்த லாரி, சிமெண்ட் லோடு ஏற்றி முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் லாரியை சோதனை செய்ததில் சுமார் ஒன்றரை டன் எடைகொண்ட 35 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விபத்துக்குள்ளான லாரியுடன் செம்மரக்கட்டைகளை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, சேலம் மாவட்டம் ஆத்தூர் பதிவு எண் கொண்டது. மேலும், செம்மரக் கட்டைகள் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்டதா, எந்த வழியாக லாரி வந்தது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : ரூ.50லட்சம் மதிப்புள்ள சந்தனமரக் கட்டைகளை கடத்த முயன்ற 14 பேர் கைது