ETV Bharat / state

தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! - Revoting in TN

தருமபுரி: மக்களவைத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிக்குட்பட்ட எட்டு வாக்குச்சாவடிகளில் மே 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

re-voting-poling-station
author img

By

Published : May 9, 2019, 7:14 PM IST

Updated : May 9, 2019, 9:13 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி 38 மக்களவைத் தொகுதிகள் மற்றம் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பாப்பிரெட்படிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பட்டி, ஜாலி புதுார், நத்தமேடு பகுதிகளில் அமைந்த 10 வாக்குச்சாவடி மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக திமுக சார்பில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழியிடம் மனு அளிக்கப்பட்டது.

தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

இந்த மனு தலைமைத் தேர்தல் அலுவலர்களிடமும் வழங்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட எட்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் எட்டு வாக்குச்சாவடிகளுக்கு மே 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு வாக்குப்பதிவு மையங்களில் 6 ஆயிரத்து 59 வாக்காளர்கள் உள்ளனர்.

தருமபுரி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள்

வாக்குச்சாவடி

எண்

வாக்காளர்களின்

எண்ணிக்கை

1. அய்யம்பட்டி 181 1,110
2. 182 472
3. நத்தமேடு 192 797
4. 193 799
5. 194 903
6. 195 380
7. ஜாலி புதுார் 196 809
8. 197 789

Intro:TN_DPI_01_09_RE VOTING POLING STATION NEWS _VIS _7204444

Body:TN_DPI_01_09_RE VOTING POLING STATION NEWS _VIS _7204444

Conclusion:தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் இடைத் தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட எட்டு வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு 6059 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் ........ தருமபுரி மாவட்டத்தில் 8 வாக்கு சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது .இதனை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி இந்த வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி.மற்றும் அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது.பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டி ஜாலி புதூர் நத்தமேடு பகுதிகளில் அமைந்த 10 வாக்குச்சாவடி மையங்களில் முறைகேடு நடந்ததாக திமுக சார்பில் தர்மபுரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழியிடம்  திமுகவினர் மனு வழங்கினர்.இம்மனு தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களிடமும் வழங்கினர் இக்கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட 8 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்க அறிவித்துள்ளது. அய்யம்பட்டி வாக்குப் பதிவு மையத்தில் வாக்குச்சாவடி எண் 181 இந்த வாக்குச்சாவடியில் 1110 வாக்காளர்களும் 182 எண் கொண்ட வாக்குச்சாவடியில் 472 வாக்காளர்களும் நத்தமேடு பகுதியில் வாக்குச்சாவடி எண் 192 இந்த வாக்குச்சாவடியில் 797 வாக்காளர்களும்  193 எண் கொண்ட வாக்குச்சாவடியில் 799 வாக்காளர்களும் 194 எண் வாக்கு சாவடியில் 903 வாக்காளர்களும் 195எண்கொண்ட வாக்கு சாவடியில் 380 வாக்காளர்களும் ஜாலி புதூர் பகுதியில் வாக்குச்சாவடியின் 196ல் 809 வாக்காளர்களும் வாக்குச்சாவடி எண் 197ல் 789 வாக்காளர்கள் உள்ளனர் .மொத்தம் எட்டு வாக்குப்பதிவு மையங்களில் 6059 வாக்காளர்கள் உள்ளனர்.இப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
TN_DPI_01_09_RE VOTING POLING STATION NEWS _VIS _7204444

Last Updated : May 9, 2019, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.