தருமபுரி மாவட்டம் அருகேயுள்ள தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் விளைச்சல் செய்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (ஆக.22) கொண்டாடப்பட உள்ளதால், தங்களது வீடுகளில் பூஜைக்கு பூக்கள் வாங்க பொதுமக்கள் மாவட்ட பூக்கள் சந்தையில் குவிந்துள்ளனர். பூக்களின் விலை சென்ற இரண்டு தினங்களை விட இன்று (ஆக.21) இருமடங்கு உயர்ந்து விற்பனையானது.
பூக்களின் விலை நிலவரம்:
சந்தையில் கிலோ ரூ. 80க்கு விற்ற சாமந்தி ரூ. 160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ. 200க்கு விற்ற நந்தவட்டம் பூ கிலோ ரூ. 300க்கும்.
ரூ. 150க்கு விற்ற சம்பங்கிப்பூ கிலோ ரூ. 180 க்கும்.
ரூ. 600க்கு விற்ற கனகாம்பரம் பூ கிலோ ரூ. 1000க்கும்.
ரூ. 400க்கு விற்ற மல்லிகை பூ கிலோ ரூ. 800க்கும்.
ரூ. 150க்கு விற்ற பட்டன் ரோஸ் கிலோ ரூ. 250க்கும்.
ரூ. 20க்கு விற்ற ரோஸ் ஒரு கட்டுக்கு ரூ. 80க்கும்.
ரூ. 140க்கு விற்ற அரளிப்பூ கிலோ ரூ. 200க்கும்.
ரூ. 40க்கு விற்ற செண்டு மல்லி பூ கிலோ ரூ. 80க்கும் விற்பனையானது.
கரோனா ஊரடங்கு காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பு பூக்கள் விற்பனை இல்லாததால், விவசாயிகள் 40 விழுக்காடு விவசாய நிலத்தில் இருந்த பூச்செடிகளை அழித்து மாற்றுப்பயிர்க்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாகவே பூக்கள் விலை உயர்ந்திருப்பதாக பூக்கள் சாகுபடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் மாதங்களிலும் சுபமுகூர்த்த தினங்கள் இருப்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அதன் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: 60 நாட்களுக்குப் பிறகு இயங்கிய சத்தியமங்கலம் பூ மார்க்கெட்!